உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா, சாராயம் வைத்திருந்தவர் கைது

கஞ்சா, சாராயம் வைத்திருந்தவர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா மற்றும் புதுச்சேரி சாராயம் விற்க எடுத்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் குயிலாப்பாளையம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது குயிலாப்பாளையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.சந்தேகமடைந்த போலீசார் அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 50 கிராம் கஞ்சா,5 லிட்டர் புதுச்சேரி சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது. நடுவீரப்பட்டு போலீசார் கஞ்சா மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து, விற்பனைக்காக எடுத்து வந்த பண்ருட்டி திருவதிகை ஆதம்கான் தர்கா பகுதியை சேர்ந்த காஜாமொய்தீன் மகன் ஷேக்ஹசிம், 23; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை