| ADDED : ஆக 07, 2024 06:37 AM
விருத்தாசலம் விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அதையொட்டி, அம்மன் அலங்கரிக்கப்பட்டு, தேரில் எழுந்தருள செய்யப்பட்டு, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.சன்னதி வீதி, தென்கோட்டை வீதி, மேலக்கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி உள்ளிட்ட நான்கு கோட்டை வீதிகளையும் வலம் வந்து, தேர் நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.இன்று (7ம் தேதி ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சி, நாளை (8ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருமாங்கல்ய தாரணம் என்கிற ஆடிப்பூர திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா செய்து வருகின்றனர்.