உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆவினங்குடி பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினம்

ஆவினங்குடி பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினம்

திட்டக்குடி: ஆவினங்குடி பி.எஸ்.வி., நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.பள்ளி நிர்வாகி கீதா செல்வன் தலைமை தாங்கினார். அலங்கரிக்கப்பட்ட அப்துல்கலாம் படத்திற்கு ஆசிரியைகள், பள்ளி மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்துல்கலாமின் சிறப்புகள் பற்றியும், பள்ளி மாணவர்கள் மீது அவர் கொண்ட பற்றுதல் குறித்தும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகி கீதா செல்வன் எடுத்துரைத்தார். அப்துல்கலாம் பற்றி மாணவ, மாணவிகள் சிறப்புரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி