உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளம் குத்தகை ஏலம் ஒத்திவைப்பு

குளம் குத்தகை ஏலம் ஒத்திவைப்பு

நெல்லிக்குப்பம் : கொங்கராயனுாரில் முன் அறிவிப்பு இல்லாமல் குளம் குத்தகை ஏலம் நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதுநெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுார் ஊராட்சியில் காலனி பகுதியில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தில் மீன் பிடிக்கும் பணிக்காக ஆண்டுதோறும் குத்தகை விடுவது வழக்கம். வரும் ஆண்டுக்கான குத்தகை ஏலத்தை நடத்த நேற்று ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் கிரிஜா உத்திரவேல் முன்னிலையில் ஏற்பாடுகள் நடந்தது. அப்போது அங்கு கூடிய பொது மக்கள் யாருக்கும் தெரியபடுத்தாமல் ரகசியமாக ஏலம் விடுவது கண்டிக்கதக்கது. எனவே அனைவருக்கும் தெரியபடுத்தி வேறு நாளில் ஏலம் விட வேண்டுமென தகராறு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சித் தலைவர் ஏலத்தை ஒத்தி வைத்தார். நாளை (5ம் தேதி) மீண்டும் குத்தகை ஏலம் நடக்கும் என அறிவித்தார்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ