உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர்கள் விபரங்கள் சேகரிப்பில் அ.தி.மு.க., தீவிரம்

வாக்காளர்கள் விபரங்கள் சேகரிப்பில் அ.தி.மு.க., தீவிரம்

பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதியில் அ.தி.மு.க.,வினர் வாக்காளர்களின் விபரங்கள் சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடலுார் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., உட்பட பல்வேறு கட்சியினர் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஓட்டு சேகரிப்பில் தீவிரம் காட்டுவது வழக்கம்.அதன்படி, நல்லுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் அக்கட்சியின் தங்களின் கிளை செயலர்கள், பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்காளர் பட்டியலை அவர்களிடம் வழங்கி வருகின்றனர்.அதில் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், இறந்தவர்களின் விபரம், வெளிநாடுகளில் உள்ளவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து தரும்படி, அறிவுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ