உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., நீர்மோர் பந்தல் அகற்றம் கடலுாரில் திடீர் பரபரப்பு

அ.தி.மு.க., நீர்மோர் பந்தல் அகற்றம் கடலுாரில் திடீர் பரபரப்பு

கடலுார் : கடலுாரில் அ.தி.மு.க.,வின் நீர் மோர் பந்தல் அகற்றப்பட்டதால், பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கமாக கோடை காலங்களில் அரசியல் கட்சிகள் நீர் மோர் பந்தல் அமைப்பர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் நடை முறையில் இருப்பதால், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும்.கடலுார் மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் அணி கார்த்திகேயன், சூரப்பன்நாயக்க சாவடி சந்திப்பில் நீர் மோர் பந்தல் அமைத்தார். இதற்கு தி.மு.க., மாஜி அமைச்சர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் அந்த இடத்தில் நீர் மோர் பந்தல் அமைப்போம் என, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், நீர் மோர் பந்தல் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் நகரில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கோரி ஆர்.டி.ஓ., அபிநயாவிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை