உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அட்சய திருதியை சிறப்பு விற்பனை: ஸ்ரீவள்ளி விலாசில் மக்கள் ஆர்வம்

அட்சய திருதியை சிறப்பு விற்பனை: ஸ்ரீவள்ளி விலாசில் மக்கள் ஆர்வம்

கடலுார் : கடலுார் ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோடு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நடந்தது. ஜூவல்லரி பங்குதாரர்கள் சீனுவாசன், ரமேஷ், விக்னேஷ்ராம் ஆகியோர் விற்பனையை துவக்கி வைத்தனர்.அவர்கள் கூறுகையில், 'ஹால்மார்க் தங்க நகைகளை விற்பனை செய்கிறோம். 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க கைராசி நிறுவனமான ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து புதுப்புது டிசைன்களில் ஏராளமான நகைகள் கொண்டு வந்து குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளிப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.அட்சய திருதையில் வாடிக்கையாளர்கள் நகைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தங்க நகை சிறு சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயன்பெற வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை