உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிணற்றில் மூழ்கி முதியவர் சாவு

கிணற்றில் மூழ்கி முதியவர் சாவு

திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த ம.புடையூரை சேர்ந்தவர் கண்ணன்,64. இவரது மனைவி ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில், மருமகள் அம்சவள்ளி பராமரிப்பில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அதே பகுதி வயல்வெளியில் உள்ள தரைக்கிணற்றில் குளிக்க சென்றவரை காணவில்லை. உறவினர்கள் அவரை தேடிவந்த நிலையில், நேற்று காலை கிணற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை