உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே குப்பைக்கு தீ வைத்தபோது, சேலையில் தீப்பிடித்து மூதாட்டி இறந்தார்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் சீதாலட்சுமி, 76; கணவர் இறந்த நிலையில், தனது மகனுடன் வசித்துவந்தார். மகன் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சீதாலட்சுமி நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள குப்பையை கூட்டி தீ வைத்துள்ளார். அப்போது சேலையில் தீப்பிடித்தது. தீ உடல் முழுவதும் பரவியதால் பாதிக்கப்பட்ட சீதாலட்சுமி அலறினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். இருந்தும், மூதாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும்போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ