உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயன்பாடின்றி அங்கன்வாடி கட்டடம் ரூ.5.50 லட்சம் அரசு நிதி வீண்

பயன்பாடின்றி அங்கன்வாடி கட்டடம் ரூ.5.50 லட்சம் அரசு நிதி வீண்

பெண்ணாடம் : சோழன்நகரில் பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வரும் அங்கன்வாடி மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம் பேரூராட்சி, சோழன்நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் துவங்கப்பட்டது. போதிய இடவசதி இல்லாததால் குழந்தைகள் அமர்ந்து படிக்கவும், சமைக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது.தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 5.50 லட்சம் செலவில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி, முடிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை மின் இணைப்பு வழங்காமல், பயன்பாடின்றி பாழாகி வருவதுடன், அரசு நிதியும் வீணாகிறது. எனவே, சோழன்நகரில் பாழாகி வரும் புதிய அங்கன்வாடியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை