உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரவான் களபலி நிகழ்ச்சி

அரவான் களபலி நிகழ்ச்சி

பெண்ணாடம், - பெண்ணாடம் அடுத்த அரியராவி திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த அரவான் களபலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.விழா, கடந்த மாதம் 16ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10:00 மணியளவில் அரவான் களபலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5:00 மணியளவில் தீமிதி உற்சவம் நடந்தது. இன்று (3ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம், நாளை (4ம் தேதி) போர்மன்னன் நிகழ்ச்சியுடன் தீமிதி திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி