உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பில் சாதனை

அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பில் சாதனை

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.கடலுார் கம்மியம்பேட்டை அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவி ஸ்ரீமதி 485 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவர் கவின்சரண் 484 பெற்று இரண்டாமிடம், மாணவி கரிஷ்மா ஸ்ரீ மற்றும் மாணவர் சாய்கணேஷ் ஆகியோர் தலா 483 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.மேலும், 470க்குமேல் 14 பேர், 450க்குமேல் 39 பேர், 400க்குமேல் 101 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில்3 பேர், தமிழ் பாடத்தில் 10 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி, தலைவர் சிவக்குமார், லக்ஷ்மி, நிர்வாக அதிகாரி சிவராஜ், பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்