| ADDED : மே 15, 2024 01:48 AM
கடலுார் : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.மாணவி ஹரித்ரா 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவர்கள் சிவதீப் ஆறுமுகம் மற்றும் முகில் ஆகியோர் 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவி தேவதர்ஷினி மற்றும் மாணவர் சரண்குமார் 476 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.மேலும், 470க்குமேல் 8 பேர் 450க்குமேல் 19 பேர், 420க்குமேல் 38 பேர், 400க்குமேல் 61 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஐ.டி., பாடப்பிரிவில் 3 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி, சேர்மன் சிவக்குமார், லக்ஷ்மி, நிர்வாக அதிகாரி சிவராஜ், பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.