புவனகிரி: தி.மு.க., ஆட்சியில், தமிழக மக்கள் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர் என, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசினார்.புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராமத்தில், மாவட்ட ஊராட்சிக்குழு நிதி ரூ. 20 லட்சத்தில், பாலம் கட்டப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் நிதியை ஒதுக்கி ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் பாலம் திறப்பு விழா மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிளைச் செயலாளர் சசிசெல்வராஜ் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன், ஒன்றிய செயலாளர் சீனுவாசன், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, துணை சேர்மன் வாசுதேவன். மாவட்ட பிரதிநிதி சிவஞானம் முன்னிலை வகித்தனர்.அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., புதிய பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய உறுப்பினர் அட்டையை கட்சியினருக்கு வழங்கினார்.அவர் பேசுகையில், தமிழகத்தில் நடந்துவரும் தி.மு.க., ஆட்சியில் பொதுமக்கள் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். தி.மு.க.,விற்கு முடிவுகட்ட சட்டசபை தேர்தலை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தினசரி அரங்கேறி வருகிறது. இதற்கு முடிவு கட்ட, மீண்ம் அ.தி.மு.க., ஆட்சி வர கட்சியினர் உழைக்க வேண்டும் என்றார்.விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், ஒன்றிய பொருளாளர் தங்கமணி, அவைத்தலைவர் ஆண்டவர் செல்வம், கவுன்சிலர் பவானி தங்கமணி, அஞ்சம்மாள் பாலகிருஷ்ணன், கிளை செயலாளர் ஆனந்தன், சுகுமாரன், துரை, ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.