உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகரமன்ற கூட்டம் நடைபெறாததால் நெல்லிக்குப்பத்தில் பணிகள் பாதிப்பு

நகரமன்ற கூட்டம் நடைபெறாததால் நெல்லிக்குப்பத்தில் பணிகள் பாதிப்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் நகர மன்ற கூட்டத்தை நடத்தி திட்டப் பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியானது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டது.தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளிவந்ததைத் தொடர்ந்து 7ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டது. இதனால் மீண்டும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பணியை துவக்கினர். நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி நகர மன்ற கூட்டம் நடந்தது. தேர்தல் நடத்தை விதிகளால் அதன்பிறகு கூட்டம் நடக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கூட்டத்தை நடத்தவில்லை.இதனால் நகாட்சியில் திட்டப்பணிகளை நிறைவேற்ற முடியாமல் பணிகள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக நகரமன்ற கூட்டத்தை நடத்தி திட்டபணிகள் தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி