உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குப்பை வண்டி திருட முயற்சி; கடலுார் அருகே 3 பேர் கைது

குப்பை வண்டி திருட முயற்சி; கடலுார் அருகே 3 பேர் கைது

கடலுார் : கடலுார் அருகே குப்பை வண்டிகளை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் துறைமுகம் போலீசார் தியாகவல்லி ஊராட்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சிக்கு சொந்தமான 2 குப்பை வண்டிகளை 3 மர்ம நபர்கள் மினி லாரியில் ஏற்றுவதை பார்த்த போலீசார், அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், செம்மங்குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 33; சேடப்பாளையம் வைத்தியநாதன் மகன் மணிகண்டன்,26; புதுச்சேரி உத்திராபதி மகன் அருண்,26; என்பது தெரிந்தது.இவர்கள் 2 குப்பை வண்டிகளை வெல்டிங் மிஷின் மூலம் கட் செய்து மினி லாரியில் ஏற்றி திருட முயன்றது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, குப்பை வண்டிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை