உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருவேல மரங்களை வெட்ட ரூ.7.65 லட்சத்திற்கு ஏலம்

கருவேல மரங்களை வெட்ட ரூ.7.65 லட்சத்திற்கு ஏலம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுார் ஊராட்சியில் 50 ஏக்கருக்கும் மேல் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கருவேல மரங்கள் வளர்ந்து மண்டியுள்ளது. தற்போது அந்த ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். கருவேல மரங்கள் இருப்பதால் மண் எடுக்க முடியாத நிலை இருந்தது.இதனால், மரங்களை வெட்டி எடுக்க கடந்த வாரம் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு கூடிய அப்பகுதி மக்கள் ரகசியமாக ஏலம் விட கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் ஏலத்தை ஒத்தி வைத்தனர்.அதனையடுத்து நேற்று முன்தினம் ஏலம் நடந்தது. இதில், 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை