உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., சார்பில், போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தலைமை ஆசிரியர் சரவணகுமார் தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் பள்ளியில் இருந்து துவங்கி, பரங்கிப்பேட்டை பெரியமதகு வரை சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது.ஊர்வலத்தில், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உதயகுமார், ஆசிரியர்கள் சாந்த மோகன், வினோத்குமார், சப்இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், துரை, குமரேசன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ