உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரிஸ்டோ பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரிஸ்டோ பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கடலுார் இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் வெங்கட்ரமணன், அரசு மருத்துவமனை மனநல மற்றும் சுகாதாரத்துறை டாக்டர் சத்தியமூர்த்தி, மனநல டாக்டர் பார்த்திபன் ஆகியோர், போதைப்பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய் பாதிப்பு குறித்து பேசினர். யாழ் தியேட்டர் மற்றும் ஆய்வு இயக்குநர் கோபி தலைமையிலான குழுவினர் நாடகம் மற்றும் உறுதிமொழி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி, பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே மற்றும் துணை முதல்வர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ