உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜான்டூயி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜான்டூயி கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில், 100 சதவீத ஒட்டுபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் பங்கேற்று, 100 சதவீத ஓட்டுப்பதிவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.இதில் மெஹந்தி, சுவரொட்டி விளக்கு காட்சி, மாணவியருக்கு தேர்தல் நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவருக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் பரிசு வழங்கினார்.விழாவில் கல்லூரி மாணவியர்கள் வாக்காளர் பாடலை இசைத்தனர். மகளிர் சுய உதவிக் குழுவினை சேர்ந்தவர்கள் ஓட்டுரிமை முக்கியத்துவம் குறித்து கோலம் போட்டு கோலாட்ட நடனம் ஆடினர்.இதில் டி.ஆர்.ஒ., ராஜசேகர், தாசில்தார் ஆனந்த், பி.டி.ஒ.தங்கம், கல்லூரி தலைவர் வீரதாஸ், அறங்காவலர்கள் வேலண்டினா லெஸ்லி, எமர்சன் ராபின், சுகன்யா ராபின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை