உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளலார் குருகுலம் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

வள்ளலார் குருகுலம் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

வடலுார்: வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பள்ளி தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பூர்ணிமா தேவி வரவேற்றார். வடலுார் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் கலந்து கொண்டு மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எவ்வாறு ஏற்பட்டது .அதனால் பல குடும்பம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மாணவர்கள் யோகா, உடற்கல்வி ,ஓவியம், கபடி போன்ற உடல் நலம், மனநலம் காக்கக்கூடிய செல்களில் ஈடுபட வேண்டும். என அறிவுறுத்தினார். பின் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்னர். பள்ளி மாணவர் சாய்ராம் போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான வாசகங்களை கூறி அனைவருக்கும் பாராட்டையும் பெற்றார்.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் , குரு பிரசாத், வெற்றிச்செல்வன், உடற்கல்வி ஆசிரியர் ஜெயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை