உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க., கொண்டாட்டம்

இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க., கொண்டாட்டம்

விருத்தாசலம், : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதையொட்டி, விருத்தாசலத்தில் தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அமைப்பாளர் ராமு, அவைத் தலைவர் செங்குட்டுவன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், நகர துணை செயலாளர்கள் நம்பிராஜன், சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, பொருளாளர் மணிகண்டன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சதீஷ்குமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை