உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி பிரசாரம் 4 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பிரசாரம் 4 பேர் மீது வழக்கு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்த, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சிதம்பரம் வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து, நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டை பஸ் நிலையம், பு.முட்லூர், கரிக்குப்பம் ஆகிய பகுதிகளில், அனுமதியின்றி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் தேர்தல் பிரசாரம் செய்தார். இதுகுறித்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் விஜய், அனுஷாதேவி, வர்ஷா ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், புதுக்கோட்டை மாவட்டம் சிவக்குமார் என்கிற முகில், வி.சி., ஒன்றிய செயலாளர் எழில்வேந்தன், நாக சர்வ இயக்கம் மாவட்ட பொருளாளர் ரவி ஆகிய 4 பேர் மீது, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !