மேலும் செய்திகள்
மூதாட்டி தாக்கு தம்பதி மீது வழக்கு
09-Aug-2024
விருத்தாசலம் : நிலத்தகராறில் தாக்கி கொண்ட இருதரப்பை சேர்ந்த எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் வயலுார் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 36. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு நிலப்பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், பிரச்னைக்குரிய நிலத்தில் இருந்த அளவு கல்லை சரவணன் நேற்று பிடுங்கி எரிந்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பாக தாக்கிக்கொண்டனர்.இதுகுறித்து இருதரப்பு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் சரவணன், மணிகண்டன், கோதண்டராமன், சிவசுப்ரமணியன், தேவதாஸ், மூர்த்தி உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Aug-2024