உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயின் பறிப்பு போலீசார் விசாரணை

செயின் பறிப்பு போலீசார் விசாரணை

வேப்பூர: வேப்பூர் அருகே பெண்ணிடம் 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.வேப்பூர் அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் வேலு மனைவி லட்சுமி, 65; இவர் நல்லுார் வார சந்தை எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று மதியம் 12:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் கடையில் பொருள் வாங்குவது போல் பேச்சு கொடுத்து கொண்டு, லட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்றார்.புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை