உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கோடை பயிற்சி நிறைவு

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கோடை பயிற்சி நிறைவு

சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 40ம் ஆண்டு கோடைகால ஆங்கில இலக்கணம் மற்றும் பேச்சுப் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கி, ஆங்கில இலக்கண அவசியம் குறித்து பேசினார். பள்ளி நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிகளா வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் அன்பானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.பள்ளி துணை முதல்வர் நரேந்திரன், ஆங்கில இலக்கணத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு வகுப்பில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை கவுரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை