உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயிற்றுப்போக்கால் பாதித்தவர்களுக்கு சிதம்பரம் எம்.எல்.ஏ., ஆறுதல்

வயிற்றுப்போக்கால் பாதித்தவர்களுக்கு சிதம்பரம் எம்.எல்.ஏ., ஆறுதல்

சிதம்பரம்: வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சிதம்பரம் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள பழஞ்சநல்லுார் மற்றும் மணவெளி கிராமத்தில் கடந்த 13 ம் தேதி இரவு நடந்த நடைபெற்ற திருமண வரவேற்பில் பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு உணவருந்திய சுமார் 70-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ஹார்லிக்ஸ், பழம்,பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.பின் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்தார். உடன் காட்டுமன்னார்கோயில் ஒன்றிய செயலாளர் சிவகுமார், நகர செயலாளர் எம்.ஜி.ஆர்., தாசன், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ