உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் வீனஸ் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

சிதம்பரம் வீனஸ் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 210 மாணவர்களில் 208 பேர் தேர்ச்சி பெற்று 99 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி நிவிதா 500க்கு 496 மதிப்பெண், மாணவிகள் விஷ்ருதி 494, சுஜித்ரா 493 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 88 பேர், 400க்கு மேல் 58 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் கணிதம் - 29, அறிவியல் - 8, சமூக அறிவியல் -11 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களை பள்ளி தாளாளர் குமார், முதல்வர் ரூபியால் ராணி ஆகியோர் பாராட்டினர். பள்ளி துணை முதல்வர் நரேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை