உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த கோவிலுார் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் வீரமுத்து தலைமை தாங்கினார். திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ், நல்லுார் ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முகசிகாமணி முன்னிலை வகித்தனர். நல்லுார் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலுார், சிறுமங்கலம், மதுரவல்லி, மேலூர், ஏ.அகரம், பூலாம்பாடி, நிராமணி, அருகேரி உள்ளிட்ட 9 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள், வருவாய், ஊரக வளர்ச்சி, சமூக நலம், சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி துணை கலெக்டர் சங்கரிடம் கிராம மக்கள் வழங்கினர். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ