உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கம்மாபுரத்தில் கலெக்டர் ஆய்வு

கம்மாபுரத்தில் கலெக்டர் ஆய்வு

விருத்தாசலம் : கம்மாபுரம் ஒன்றியம் சு.கீரனுார், கோ.மாவிடந்தல், வி.சாத்தமங்கலம், ஊத்தாங்கால் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டப்பணிகள் மற்றும் கலைஞரின் கனவு இல்ல வீடு கட்டுமான பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அதைத்தொடர்ந்து, கோ.மாவிடந்தல் ரேஷன் கடையில் வினியோகம் செய்த அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களைஆய்வு செய்து, பொதுமக்களிடம் கடை திறக்கும் நேரம் மற்றும் பொருட்கள் அளவு குறித்து கேட்டறிந்தார்.மேலும், கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.முன்னதாக,கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் அரசு திட்ட பணிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்து ஒன்றிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.ஆய்வின் போது, செயற் பொறியாளர் தணிகாசலம், பி.டி.ஒ.,க்கள்குமரன், சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை