உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முட்டம் சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

முட்டம் சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

கடலுார்: முட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையை கலெக்டர் அருண்தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கலெக்டர் அருண்தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகளை பார்வையிட்டு தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.தொடர்ந்து, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் பிரசவ வார்டு, ஆய்வகம், மருந்தகம், சிகிச்சை அளிக்கும் அறை ஆகியவை பார்வையிட்டார். நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு மருத்துவமனையை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது மருத்துவ அலுவலர் அருண்மொழிதேவன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ