உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் ஒயரில் சிக்கி பசுமாடு, கன்று சாவு

மின் ஒயரில் சிக்கி பசுமாடு, கன்று சாவு

புவனகிரி, : புவனகிரி அருகே வயலில் அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி, மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு, கன்றுடன் சுருண்டு விழுந்து இறந்தது.புவனகிரி அருகே பி.உடையூரை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு மற்றும் கன்று மேய்ச்சலுக்காக நேற்று வயல்வெளிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, காற்றில் முறிந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பத்துடன் கூடிய ஒயரில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு மற்றும் கன்று சுருண்டு விழுந்து இறந்தது. அதிஷ்ட வசமாக பெரியசாமி தப்பினார். தகவலறிந்த பி.உடையூர் மின் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரத்தை துண்டித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி