உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாமிப்பிள்ளை நகரில் கழிவுநீர் வாய்க்கால் கடலுார் மேயர் உறுதி

சாமிப்பிள்ளை நகரில் கழிவுநீர் வாய்க்கால் கடலுார் மேயர் உறுதி

கடலுார் : கடலுார் புதுக்குப்பம் சாமிப்பிள்ளை நகரில் கழிவு நீர் வழிந்தோடுவதை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பார்வையிட்டார்.கடலுார் புதுக்குப்பம் சாமிப்பிள்ளை நகரில் ஏராளமானோர் வீடுகட்டி வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இதுவரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தும் கழிவுநீர் அந்தந்த வீட்டு வாசலில் குளம்போல் தேங்கி வழிந்தோடுகிறது. அதனால் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் நேற்று மாநகர மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் காந்திராஜ், ஆகியோர் சாமிப்பிள்ளை பகுதிக்கு சென்று கழிவுநீர் வழிந்தோடுவதை பார்வையிட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனே மேயர் சுந்தரி ராஜா இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ