உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் வெயில் தாக்கம் 99 டிகிரியாக பதிவு

கடலுாரில் வெயில் தாக்கம் 99 டிகிரியாக பதிவு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று சுட்டெறிக்கும் வெயிலின்போது தரைக்காற்று வீசியதால் வெப்பம் அதிகரிக்காமல் 99 டிகிரி பதிவானது.தமிழகம் முழுவதும் சட்டெறிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கடலுார் மாவட்டத்தில் 104.4 டிகிரியாக உயர்ந்தது. நேற்று காலையில் இருந்து வெப்பம் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால், பிற்பகல் முதல் பலத்த தரைக்காற்று வீசியது. இதனால் வெயிலின் உக்கிரம் சற்று குறைந்தது. இதனால், நேற்று 99 டிகிரி வெப்பம் பதிவானது. இது குறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறும்போது, தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வந்தால் மேற்பரப்பு உலர்ந்துவிடும். அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப தரைக்காற்று வீசுவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் தரைக்காற்று வேகமாக வீசியது. இதனால் வெப்பம் அதிகரிக்காமல் 99 டிகிரி பதிவானதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை