உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகரில் பஸ் நிலையம் கேட்டு கடலுாரில் ஆர்ப்பாட்டம்

நகரில் பஸ் நிலையம் கேட்டு கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார்: புதிய பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்க கோரி, அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடலுாரில் புதிய பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்க வேண்டும், மின் கட்டண உயர்வை உடன் வாபஸ் பெற வேண்டும், புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தை மத்திய அரசு உடன் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க துணைத் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலாளர் தேவநாதன் வரவேற்றார். வக்கீல் சந்திரசேகரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சங்க பொதுச் செயலாளர் வெங்கடேசன், மக்கள் ஒற்றுமை மேடை அமர்நாத், வக்கீல்கள் திருமார்பன், மேரி, லெனின் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சங்க நிர்வாகிகள் மருதவாணன், உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.பொருளாளர் ரமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை