உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தையம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

குழந்தையம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் ஏழு குழந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள், பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் உள்ள ஏழு குழந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் பக்தர்கள் செங்குந்தர் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஏழு குழந்தைகள் அம்மன் வேடமணிந்து ஊர்வலமாக புறப்பட்டு கடை வீதி வழியாக வலம் வந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.மேலும் பக்தர்கள் சாகான் வேடமணிந்து அம்மன் விருத்தப்பாடல்கள் பாடினர். விழாவில் நேற்று செடல் உற்சவம் நடந்தது. இன்று மாலை தலைத்தேர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை