உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா 

அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு கோதண்டவிளாகம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாநடந்தது.திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. திரவுபதியம்மனுக்கு பல்வேறு பூஜைகள். பாரதம் படித்தல், பஞ்சபாண்டவர்கள் பிறப்பு, திருக்கல்யாணம், தினமும் சாமி வீதியுலா நடந்தது.தீமிதியையொட்டி கடந்த 28 ம் தேதி காலை 8.00 மணிக்கு அரவான் களபலி , பூஜைகள் நடந்தது.மாலை 5.00 மணியளவில் பக்தர்கள் பலரும் காப்புக்கட்டிக்கொண்டு சக்திகரகத்துடன் குளத்திலிருந்து புறப்பட்டு கோவில் தீமித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.விழாவில் சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி