உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மருங்கூரில் நடந்து வரும் அகழாய்வில், செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தமிழக தொல்லியல் துறை சார்பில், கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மருங்கூர் ஏரிக்கரை பகுதியில் கடந்த ஜூன் 18ம் தேதி முதல் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.இந்த அகழாய்வில் முதற்கட்டமாக ராஜராஜன் காலத்தை சேர்ந்த செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரவுலட்டட் வகை பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன.இந்நிலையில், தற்போது கண்களுக்கு மை தீட்டுவதற்கு பயன்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சனக்கோல் 4.7 செ.மீ நீளம், 3.6 கிராம் எடை கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ