உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் அன்னதானம் வழங்கல் 

விருத்தாசலத்தில் அன்னதானம் வழங்கல் 

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, விருத்தாசலம் நீதிமன்ற வளாகம் முன், கொளஞ்சியப்பர் அன்னதான கமிட்டி சார்பில், 15ம் ஆண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வழக்கறிஞர்கள் விஜயகுமார், அருள்குமார் ஏற்படுகளை செய்து, அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இதில், நகராட்சி கவுன்சிலர் சிங்காரவேல், அரசு மருத்துவர் அஜித்குமார், சட்ட கல்லுாரி மாணவர் விக்னேஷ்குமார், வழக்கறிஞர்கள் சதீஷ்குமார், தம்பா ரமேஷ், தி.மு.க., வடக்கு ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல், பட்டதாரி ஆசிரியர் வெற்றிவேல், பிரபாகரன், சக்தி மற்றும் அன்னதான குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !