உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வண்டிப்பாளையம் அரசு பள்ளியில் தினமலர்- பட்டம் இதழ் வழங்கல்

வண்டிப்பாளையம் அரசு பள்ளியில் தினமலர்- பட்டம் இதழ் வழங்கல்

கடலுார் : கடலுார், வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ், திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.கடலுார், வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் இதழ் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியை கல்பனா ராணி, தமிழாசிரியர் கதிர்வேல், உடற்கல்வி ஆசிரியை ஷர்மிளா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ