உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் பேச்சு

தே.மு.தி.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் பேச்சு

வடலுார்: 'கடலுாரில் சிவக்கொழுந்து வெற்றி பெற்றால் கோரிக்கைகளை 6 மாதத்தில் நிறைவேற்றுவார்' என தே.மு.தி.க., துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் பேசினார்.கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அக்கட்சி துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் குள்ளஞ்சாவடியில் பிரசாரம் செய்தார்.அப்போது, அவர் பேசுகையில், 'சிவக்கொழுந்து பண்ருட்டி எம்.எல்.ஏ., வாக சிறப்பாக பணியாற்றியவர். இவருக்கு தொகுதியில் என்னென்ன பிரச்னை உள்ளது என்பது தெரியும். இவர், வெற்றி பெற்றால் கோரிக்கைகளை 6 மாதத்தில் நிறைவேற்றுவார். விஜயகாந்திற்கு பிடித்த மாவட்டம் கடலுார். சிவக்கொழுந்தை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், மாவட்ட பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பாஷியம், கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பு, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், தகவல் தொழில் நுட்ப அணி திருமுல்லைவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை