உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கலெக்டரிடம் தி.மு.க.,வினர் மனு

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கலெக்டரிடம் தி.மு.க.,வினர் மனு

வேப்பூர் : ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி தி.மு.க., நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.வேப்பூர் அடுத்த தே.புடையூர் அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான விடுதிக்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. கலெக்டர் ஆதித்ய சிபி செந்தில்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் கணேசன் முன்னிலை வகித்தார்.அப்போது, நிராமணி, பூலாம்பாடி, ஏ.அகரம் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நல்லுார் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மனு கொடுத்தார். மங்களூர் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை