கடலுார்: கடலுார் தொகுதி வளர்ச்சி பெற தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத், கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காராமணிக்குப்பம், தோட்டப்பட்டு, சாவடி, கோண்டூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது, அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் , மடிக்கணினி, கறவை மாடு, ஆடு, உள்ளிட்ட பல திட்டங்களை தி.மு.க., ஆட்சி ரத்து செய்துள்ளது.வீட்டு வரி, மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலுார் தொகுதி வளர்ச்சி பெற தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தி்ல் வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.கடலுாரில் ஒருங்கிணைந்த இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கவும், பண்ருட்டியில் முந்திரி ஏற்றுமதி மண்டலம், முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்' என வாக்குறுதியளித்து சிவக்கொழுந்து உறுதியளித்து பேசினார். அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் குமார், தே.மு.தி.க., முன்னாள் எம்.எல்.ஏ., மோகன்ராஜ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் காசிநாதன்,ஒன்றியக்குழு சேர்மன் பக்கிரி, மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி ஆதி நாராயணன், தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், மாவட்ட துணை செயலாளர் சித்தநாதன், ஒன்றிய செயலாளர் கலாநிதி, மாநகர செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர் பமிதா கலாநிதி, அய்யப்பன், ராஜா, செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.