| ADDED : ஜூன் 28, 2024 01:08 AM
கடலுார்: தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை அரசு தடுக்க வேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில் தே.மு.திக., சார்பில் மனு கொடுக்கப்பட்டது.கடலுார் தே.மு.தி.க., வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் கொடுத்துள்ள மனு:தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனையை உடனடியாக அரசு தடுக்க வேண்டும். அரசின் துணையோடு தான் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை நடக்கிறது. இதை உடனடியாக தடுக்க வேண்டும். இச்சம்பவத்திற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சாராய ஆலைகளையும் மூட உடனடியாக உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அப்போது, தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத், அவைத்தலைவர் ராஜாராம், மாநகர செயலாளர் சரவணன், துணை செயலாளர்கள் சித்தநாதன், வேல்முருகன், பாலு மற்றும் நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் கலாநிதி, தென்னரசு, பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.