கடலுார் : மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கினார். கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சென்னை முன்னாள் எம்.பி., இளங்கோவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், மருதூர் ராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் அகஸ்டின் பிரபாகரன், சுந்தரமூர்த்தி, சலீம், இளையராஜா, நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் விஜயசுந்தரம், தனஞ்செயன், தங்கஆனந்தன், ராயர், முத்துபெருமாள், காசிராஜன், சுப்பிரமணியன், இளைஞரணி கார்த்தி, மாணவரணி பாலாஜி, பிரசன்னா, சங்கீதா செந்தில் முருகன், மாமன்றம் கவுன்சிலர்கள் ஆராமுது, தமிழரசன், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சசிகலா ஜெயசீலன், சுதா அரங்கநாதன், சாய்புன்னிஷா சலீம், மணிகண்டன், வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.