உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., இரு அணிகள் கைகோர்ப்பு

தி.மு.க., இரு அணிகள் கைகோர்ப்பு

கடலுார் மாநகராட்சி கூட்டம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் இரு அணியாக செயல்பட்டு வந்ததால், காரசார வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா என, பல போராட்டங்கள் அரங்கேறும். கூட்டம் துவங்கியதில் இருந்தே பிரச்னை துவங்கிவிடும். மேயர் அணிக்கு எதிராக, 10 கவுன்சிலர்கள் எதிரணியில் இருந்தனர். இதனால் ஒவ்வொரு முறை கூட்டம் நடக்கும் போதெல்லாம் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர்.இந்நிலையில் லோக்சபா தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து கட்சி மேலிடம் பிரிந்திருக்கும் எதிரணியை ஒருங்கிணைத்து செயல்படுமாறு பணித்தது. அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்னும் இருப்பது குறுகிய நாட்கள் தான். அதற்காக ஏன் இவ்வளவு பிடிவாதம். எனவே, இனிமேலாவது நடந்ததை மறந்து ஒன்றுபட்டு செயல்படுவோம். அதற்காக பல விட்டமின் வழங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு எதிரணி உறுப்பினர்கள் இசைவு தெரிவித்தனர்.அதன்படி, சமீபத்தில் நடந்த கூட்டத்தில், எதிரணியினர் பிரச்னை எழுப்பாமல் அமைதி காத்தனர். அமைச்சர் அணியில் இருந்த உறுப்பினர்களிடம், எதிரணியில் செயல்பட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் கைகோர்த்தனர். ஆனால், பெரிய அளவில் கவனிப்பு இருக்கும் என, எதிர்பார்த்த எதிரணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை