உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் தொகுதியில் வெற்றி உறுதி தே.மு.தி.க., சிவக்கொழுந்து நம்பிக்கை

கடலுார் தொகுதியில் வெற்றி உறுதி தே.மு.தி.க., சிவக்கொழுந்து நம்பிக்கை

கடலுார், : கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பிரசாரம் செய்தார்.கடலுார் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து சாவடி, செம்மண்டலம், புதுப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் சம்பத் பிரசாரம் செய்தார். அப்போது, சிவக்கொழுந்திற்கு நிர்வாகிகள் கிரேன் மூலமாக 15 அடி உயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.சிவக்கொழுந்து பேசியதாவது: கடலுார் சிப்காட்டில் தொழிற்சாலைகளால் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர், சாலை வசதி நிறைவேற்றப்படும். மீனவ மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும். எனக்கு மக்கள், வியாபாரிகள், விவசாய தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக உள்ளதால் வெற்றி பெறுவது உறுதி. பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எழுச்சியான வரவேற்பு அளிக்கின்றனர்.தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவேன். நெய்வேலி என்.எல்.சி., விவகாரம், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து லோக்சபாவில் பேசி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து பிரச்னைக்கு மேம்பாலங்கள் அமைப்பது, கடலுார், பண்ருட்டியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைச் செயலாளர், மாவட்ட அவைத் தலைவர் குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மீனவரணி தங்கமணி பகுதி செயலாளர்கள் மாதவன், கந்தன், வெங்கட்ராமன், இலக்கிய அணி ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன், தே.மு.தி.க., மாவட்ட அவைத் ராஜாராம், துணை செயலாளர் சித்தநாதன், மாநகர செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் கலாநிதி, ஒன்றிய துணை சேர்மன் அய்யனார், நிர்வாகிகள் பக்கிரி, தர்மபாலன், நாராயணன், பூமிநாதன், தமிழரசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ