உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கோட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் புதுராஜன், செந்தில்குமார், இணை செயலாளர்கள் நல்லதுரை, ரவிச்சந்திரன், சேகர், அருணகிரி உட்பட பலர் பங்கேற்றனர். மாநில துணை பொதுச் செயலாளர் பழனிவேல், செயலாளர் தேசிங்கு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், மின் வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியினை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தம் செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மேலும், வரும் ஜூலை 9ல், சென்னை தமிழ்நாடு தலைமை அலுவலகம் முன் நடக்கும் காத்திருப்பு போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி