| ADDED : ஜூலை 06, 2024 05:00 AM
திட்டக்குடி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக திட்டக்குடி தொலைக்கல்வி மையம் மற்றும் இணையவழி கல்வி மையம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.நிகழ்ச்சிக்கு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் லெனின் தலைமை தாங்கினார். ஞானகுரு வித்யாலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார். மைய மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். இறையூர் கனகசபை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிறுவனர் பேராசிரியர் சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுற்றுச்சூழல் மேம்பாட்டின் அவசியம், சமூக காடுகள் வளர்ப்பதில் மாணவர்களின் பங்கு, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.தொலைக்கல்வி மையம் மூலம் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு மரக்கன்று நடுவதென உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் லெனின் துவக்கி வைத்தார். பேராசிரியர்கள் சித்ராதேவி, குமாரவேல், பாஸ்கர், பணியாளர்கள் லட்சுமி, சுகுணா, பரமேஸ்வரி, சங்கரி, சவுந்தர்யா மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கணினி பணியாளர் அனிதா நன்றி கூறினார்.