உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷனில் பாமாயில், துவரம் பருப்பு பெற கால அவகாசம் நீட்டிப்பு

ரேஷனில் பாமாயில், துவரம் பருப்பு பெற கால அவகாசம் நீட்டிப்பு

கடலுார் : ரேஷன் கடைகளில் மே- மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு வரும் 30ம் தேதி வரை பெற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பில்; கடலுார் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு 2024-மே மாதத்திற்கு கிடைக்கப் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் வரும் 30ம் தேதி வரை பெற்றுக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் 2024 மே மாதத்திற்கான பாமாயில், துவரம்பருப்பு கிடைக்க பெறாத குடும்ப அட்டைத்தாரர்கள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதத்திற்கான பொதுவிநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளில் வழக்கம் போல் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை